Thursday, January 15, 2009

சிறந்த மனிதன்

எவன் ஒருவன், தான் என்ற அகந்தை இல்லாத ஒருவன் மனிதன் ஆகிறான் .

தன் அப்பா ,தன் அம்மா, தன் குழந்தை ,தன் சுயநலம் என்பவன் நிம்மதியை இழக்கிறான் .

தன்னை தற்சோதனை செய்து பாசத்தை அனைவருக்கும் ஏற்ற தாழ்வு இல்லாமல் பகிர்ந்து அளிப்பவன் நிம்மதி அடைகிறான் .

-உலக நியதி

JUST KNOW RTI ACT

தகவல் அறியும் உரிமை


இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் நமக்குச் சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளுக்கு வலுச் சேர்க்கும் விதமாக கடந்த 2005}ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது.

இந்த உரிமையை பேச்சுரிமையின் ஒரு பகுதியாக உச்ச நீதிமன்றம் அங்கீகரித்திருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி எந்தவொரு அரசு மற்று அரசுத்துறை நிறுவனங்களிடமிருந்து எந்த மாதிரியான தகவல்களையும் பெற முடியும். இங்கு தகவல் என்பது பலதரப்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. அதாவது பதிவேடுகள், ஆவணங்கள், கடிதங்கள், இ}மெயில்கள், கருத்துகள், அறிவுரைகள், பத்திரிகை வெளியீடுகள், சுற்றறிக்கைகள், உத்தரவுகள், ஒப்பந்தங்கள், மாதிரிகள் உள்ளிட்ட அனைத்துமே 'தகவல்' என்ற பிரிவின்கீழ் வைக்கப்படுகின்றன.

அரசுத்துறைகளிடம் தனியார் நிறுவனங்களின் விவரங்கள் இருந்தால், அதைக்கூடக் கேட்டுப் பெற முடியும். எடுத்துக்காட்டாக. ஒரு தனியார் நிறுவனத்தின் ஆண்டுக் கணக்கு, இயக்குனர் குழுமம் உள்ளிட்ட விவரங்களைப் பெற வேண்டுமானால், கம்பெனிகளுக்கான பதிவாளர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனுச் செய்யலாம். இதேபோல், அறக்கட்டளை, அரசு சாரா நிறுவனம் உள்ளிட்டவற்றின் விவரங்கள் அறக்கட்டளை ஆணையர் அலுவலகத்தை அணுகிப் பெற முடியும்.

தகவல்களைப் பெறுவது நமக்கு எந்தவகையில் உதவும் என்று கேள்வி எழலாம். ஒரு அரசு நிறுவனத்தில் இருந்து எந்தத் தகவலையும் பெற முடிவதால், அரசு நிர்வாகத்தால், வெளிப்படைத்தன்மையும், பொறுப்பும் அதிகரிக்கிறது. இதனால், லஞ்சமும் ஊழலும் குறைகின்றன.அரசு எப்படிச் செயல்படுகிறது என்பதையும் திட்டங்கள் அனைத்தும் மக்களை முறையாகப் போய்ச் சேருகின்றனவா என்பதையும் தகவல்கள் மூலமாகத்தான் தெரிந்துகொள்ள முடியும்.

ஏதாவது குறைகள் இருப்பின் அதைக் களைய வேண்டும் என்ற பொறுப்பும் அரசுக்கு ஏற்படும். இதன் மூலம் ஜனநாயகத்தில் மக்கள் ஆக்கப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொள்ள வழி ஏற்படுகிறது.

நோக்கம்

சட்டத்தின் நோக்கங்கள்


 • அரசு அலுவலகங்கள் ஒவ்வொன்றின் செயல்பாட்டிலும் வெளிப்படையான ஒளிவுமறைவற்ற நிலையைக் கொண்டு வருதல்;
 • அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடையே பொறுப்புடமையை மேம்படுத்துதல்.
 • அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடி மக்களுக்கு, அதை அளிக்க வகை
 • ஊழலை ஒழித்தல்
 • அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதோடு உள்ளார்ந்த தகவல்களின் ரகசியத்தைக் கட்டிக் காத்தல்.

தகவல் பெறுவதற்குச் செய்ய வேண்டியவை

தகவல் அறியும் உரிமைச் சட்டப் பிரிவு 6ன்படி, தகவல் பெற விரும்பும் நபர், ஆங்கிலம் அல்லது தமிழ்மொழியில், ஒரு வெள்ளைத் தாளில் எழுத்து வடிவிலோ அல்லது மின்னணு வழியிலோ, உரிய அலுவலகத்திலுள்ள பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர்களிடத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனுடன், இதற்கான இன்றைய கட்டணமான ரூ.10/- (ரூபாய் பத்து மட்டும்) பணமாகவோ வரைவோலையாகவோ அல்லது அரசு கருவூல சீட்டு மூலமாகவோ, அந்த அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர் தன்னால் கோரப்படும் தகவலின் விவரங்களைக் குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு எழுத்து வடிவில் விண்ணப்பம் செய்ய முடியாதவிடத்து, அதனை எழுத்து வடிவில் கொணர்ந்திட தகுந்த, எல்லா உதவிகளையும் பொது தகவல் அலுவலர் அல்லது உதவி பொது தகவல் அலுவலர் செய்திட வேண்டும்.


தகவலுக்காக விண்ணப்பம் செய்கிற விண்ணப்பதாரர்களிடமிருந்து அந்த தகவலைக் கோருவதற்கான காரணத்தைக் கேட்டல் கூடாது. மேலும், அவரை தொடர்பு கொள்வதற்காக தேவையான விவரங்களைத் தவிர, தனிப்பட்ட சொந்த விவரங்கள் எவற்றையும் தகவல் பெற விரும்புபவர்களிடமிருந்து கோருதல் கூடாது. ஒரு தகவலுக்காக அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகம் ஒன்றிடம் விண்ணப்பம் செய்யப்படுகிறவிடத்து, அந்தத் தகவல்; (அ) பிரிதொரு அரசு அல்லது அரசு சார்ந்த அலுவலகங்களில் வைத்திருக்கப் பட்டதாக; அல்லது அதன் உறு பொருள் பிறிதொரு அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயற் பணிகளுடன் மிக நெருங்கிய தொடர்புடையதாக இருக்குமிடத்து, அந்த விண்ணப்பத்தினை அல்லது அதன் உரிய பகுதியை சம்மந்தப்பட்ட அலுவலகங்களுக்கு மாற்றல் செய்து, அத்தகைய மாற்றல் குறித்து விண்ணப்பதாரருக்கு உடனடியாக தெரிவிக்கப்படல் வேண்டும். இதனை இயன்ற அளவு விரைவாக செய்திடல் வேண்டும். எந்நேர்விலும் அந்த விண்ணப்பம் பெறப்பட்ட தேதியிலிருந்து ஐந்து நாட்களுக்குமிகைபடாமல் செய்யப்படவேண்டும்.

Punishment

தண்டனைகள்


மாநில தகவல் ஆணையமானது, புகார் அல்லது மேல்முறையீடு எதனையும் தீர்மானிக்கும்போது:

1. பொது தகவல் அலுவலர் நியாயமான காரணம் ஏதுமின்றி தகவலுக்கான விண்ணப்பம் ஒன்றினை மறுக்குமிடத்தும் ;

2. பொது தகவல் அலுவலர் காலக்கெடுவிற்குள் தகவலை அளிக்க மறுக்குமிடத்தும் ;

3. பொது தகவல் அலுவலர் தகவலுக்கான கோரிக்கையினை உள்நோக்கத்துடன் மறுக்குமிடத்தும் ;

4. கோரிக்கையின் பொருளாக இருந்த தகவலை அழிக்குமிடத்தும் ;

5. பொது தகவல் அலுவலர், தகவலை அளிப்பதை எந்த முறையிலும் தடுக்குமிடத்தும்; அந்த விண்ணப்பம் பெறப்படும் வரை அல்லது தகவல் அளிக்கப்படும் வரை ஒவ்வொரு நாளுக்கும் ரூ.250/- தண்டமாக, அந்த பொது தகவல் அலுவலர் மீது விதிக்கப்படும். எனினும், மொத்த தண்டத் தொகையானது ரூ.25,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும். இருப்பினும், தண்டம் விதிக்கப்படுவதற்கு முன்பு, சம்மந்தப்பட்ட பொதுத்தகவல் அலுவலருக்கு போதுமான வாய்ப்பளிக்கப்படுதல் வேண்டும். பொதுத்தகவல் அலுவலர், தான் நியாயமாகவும், கவனத்துடனும், செயல்பட்டுள்ளதை மெய்ப்பிக்கும் பொறுப்பு, அவரையே சார்ந்ததாகும்.மேலும் மேற்கண்ட சூழ்நிலைகளில், பொதுத்தகவல் அலுவலருக்கு எதிராக, அவருக்கு பொருந்தத்தக்க பணிவிதிகளின்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறைக்கு ஆணையம் பரிந்துரை செய்யும்.

MEDITATION PROCEDURE

 • Personality Development Course
 • Simplified Physical Exercises(R)
 • Kayakalpa Yoga (R)
 • Simplified Kundalini Yoga
 • Introspection (R)
 • Brahma Gnanam Course
 • Master Course

Personality Development Course
The Personality Development Course totally transforms a person, giving him a new perspective on life and equips him with necessary tools to handle the mounting pressure that the modern day society bestows upon him.

Simplified Physical Exercises(R)
Maintains general fitness; develops the immunity system and thus acts as a preventive and as a curative to various diseases.

Kayakalpa Yoga
Restructuring the body in a natural way, Kaya Kalpa helps cure and prevent diseases. It relieves the practitioner of many of the troubles of aging.

Simplified Kundalini Yoga
By sincere practice of meditation, the senses come under the control of our mind and we do our actions with constant awareness of the cause and effect system.

Introspection
The process of analyzing and getting a total understanding of oneself.

Master Course
The seeker becomes a spiritual master guiding their fellow beings to ease their spiritual journey.